நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில், திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், உறவினரின் வீட்டில் திருமண விருந்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய கணவர் சோகம் தரும் வகையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் சுழிபுரம் பெரியபுலோ மேற்கு பகுதியை சேர்ந்த 29 வயதான இளம் குடும்பஸ்தர் பரஞ்சோதி ததீஸ்கரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின்படி, இவர் கடந்த 09.04.2025 அன்று திருமணமானவர் ஆவார். இந்நிலையில், நேற்று தம்பதிகள் இருவரும் உறவினர் வீட்டில் நடைபெற்ற திருமண விருந்தில் பங்கேற்றபின் வீடு திரும்பிய வேளை, இவருக்கு வாந்தி ஏற்பட ஆரம்பித்துள்ளது.
வாந்தி நீங்காத நிலையில், வைத்தியரிடம் சிகிச்சை பெற்றும் விரைவில் சங்கானை பிராந்திய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சேர் நேரத்தில் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, திடீர் மரண விசாரணை அதிகாரியான ஆ. ஜெயபாலசிங்கம் தலைமையில் மரண விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
உடற்கூற்று பரிசோதனைகளில், மாரடைப்பே அவரது மரணத்துக்குக் காரணமாகத் தெரியவந்துள்ளது. பரிசோதனை முடிந்தபின் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கருத்தை பதிவிட