இலங்கை அமைச்சரவை, தொழில்துறை மற்றும் நுகர்வோர் பயன்பாட்டிற்காக உப்பு இறக்குமதியை 2025 ஜூன் 10 வரை அனுமதிக்கும் முடிவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது, நாட்டில் உப்புக்கான தேவையை பூர்த்தி செய்யும் நோக்குடன், இன்று (மே 15) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வர்த்தக அமைச்சின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஆகும் .
இந்த அனுமதி, அயோடின் கலந்த உப்பும் (நுகர்வோருக்காக) மற்றும் அயோடின் கலக்காத உப்பும் (தொழில்துறைக்காக) ஆகியவற்றை தற்காலிகமாக இறக்குமதி செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது .
இந்த நடவடிக்கை, உப்புக்கான சந்தை தேவையை பூர்த்தி செய்யவும், தொழில்துறையில் தேவையான உப்பை வழங்கவும், குறைவுகளை தவிர்க்கவும் எடுக்கப்பட்டுள்ளது
கருத்தை பதிவிட