இலங்கை மின்சார சபை (CEB) ஜூன் மாதம் முதல் டிசம்பர் 2025 வரையிலான காலத்திற்கு மின்சார கட்டணத்தை 18.3% உயர்த்தும் முன்மொழிவை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு (PUCSL) சமர்ப்பித்துள்ளது.
இந்த உயர்வு, CEB இன் முதல் காலாண்டில் ஏற்பட்ட ரூ.18 பில்லியன் இழப்பை ஈடுசெய்யும் நோக்கத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
PUCS, இந்த முன்மொழிவை தற்போது பரிசீலித்து வருவதுடன், பொதுமக்களின் கருத்துக்களையும் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான இறுதி தீர்மானம் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய கட்டண மாற்றம் ஜனவரி 17, 2025 அன்று நடைமுறைக்கு வந்தது, அதில் 20% வரை கட்டண குறைப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த புதிய உயர்வு, அந்த குறைப்பின் பின்னர் ஏற்பட்ட நிதி இழப்புகளை சமன்செய்யும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
மேலும், சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையில் செலவுகளை ஈடுசெய்யும் வகையில் மின்சார கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
கருத்தை பதிவிட