வெள்ளவத்தை – மே 18:
இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த தமிழ்ப் பொதுமக்களை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று காலை வெள்ளவத்தை மெரின் டிரைவ் கடற்கரை பகுதியில் நடைபெற்றது.
‘மே 18 குழு’ எனப்படும் குடிமை சமூக செயற்பாட்டாளர்களின் அமைப்பினரால் முன்னிலை வகித்த இந்த நிகழ்வு, மூன்றாவது முறையாக நடைப்பெற்றது குறிப்பிடத்தக்காது .
இந்நிகழ்வில், மெழுகுவர்த்தி மற்றும் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டதுடன், மலர்களும் கடலில் விடப்பட்டு அமைதியான முறையில் மரணமடைந்தோரை நினைவுகூர்ந்தனர்.
ஆனால், நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத சிலர் அங்கு புகுந்து, நிகழ்வில் கலந்து கொண்டவர்களை “இனவாதிகள்”, “தீவிரவாத ஆதரவாளர்கள்” என குற்றம் சாட்டி முழக்கம் இட்டதன் காரணமாக, நிகழ்விடத்தில் பதற்றம் நிலவியது.
பொலிஸார் தலையீடு செய்ததை அடுத்து, நிகழ்வு அமைதியாக முடிவடைந்தது. நினைவேந்தலின் அனைத்து கட்டத்தையும் முடித்த பின்னர், கலந்து கொண்டவர்கள் அமைதியாக இடத்தைவிட்டு புறப்பட்டனர்.
நிகழ்வில் கலந்துகொண்டவர்கள்:
சுவஸ்திகா ஆருளிங்கம், தரிந்து உடுவரகெதர, ராஜ்குமார் ராஜீவ்காந்த், சிறிதுங்க ஜெயசூரிய, சட்டத்தரணி நுவன் போபகே மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
தமிழ்தீ கருத்து:
தமிழ் மக்களின் வாழ்க்கையில் அழியாத காயமாகவே நீடிக்கும் முல்லிவாய்க்கால் நினைவுகள், இன்று கூட வெளிப்படையாகவேந்தப்படும்போது எதிர்ப்புகளுக்கு முகமளிக்க வேண்டிய சூழ்நிலை தொடருகின்றது என்பது கவலைக்கிடமான உண்மையே.
கருத்தை பதிவிட