2025 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த இன்லாண்ட் ரெவன்யூ (திருத்தச் சட்டம்) எண் 2 of 2025 ன் கீழ், வட்டி வருமானத்திற்கான பிடித்த வரி 5% லிருந்து 10% ஆக உயர்த்தப்பட்டது. இந்த உயர்வு, வரிவிலக்கு வரம்பான ரூ.18 இலட்சத்துக்கு குறைவாக ஆண்டு வருமானம் பெறும் நபர்களுக்கும் வரி விதிக்கப்படும் நிலை ஏற்பட, பலர் நிதிநெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறைந்த வருமானம் – அதிக வரி: சுமையில் சிக்கிய பொதுமக்கள்
இது, சிறிய வைப்பாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோரின் வாழ்வை பெரிதும் பாதித்தது. இவர்களின் வட்டி வருமானத்தில்கூட, புதிய விதிகளின் அடிப்படையில் பிடித்த வரி பிடிக்கப்பட்டு வருகிறது.
தீர்வாக ‘சுய அறிவிப்பு முறைமை’ – ஜனாதிபதியின் முன்மொழிவு
இதற்கு தீர்வாக, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள், தனது நிதி, கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகும் பொறுப்பில், “சுய அறிவிப்பு முறைமையை” அறிமுகப்படுத்தும் முன்மொழிவை அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.
இம்முறையின் கீழ், வரிவிலக்கு வரம்புக்குள் வருமானம் பெறும் நபர்கள் தங்களது வருடாந்த வருமானத்தைத் தாங்களே அறிவித்து, வட்டி வரியிலிருந்து விலக்கு பெற முடியும்.
வங்கிக் கணக்குகளுக்கு TIN கட்டாயம்!
மேலும், இன்லாண்ட் ரெவன்யூ சட்டம் எண் 24 of 2017-இல் திருத்தம் செய்யும் வகையில், எதிர்காலத்தில் எந்தவொரு வங்கிக் கணக்கும் திறக்கும்போது ‘வரி அடையாள எண் (TIN)’ கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என்பது அமைச்சரவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்தீ பார்வை:
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசாங்கம் எடுத்துள்ள இந்தத் தீர்மானங்கள், வரிவிலக்கு வரம்புக்குள் உள்ளோர் மீது தேவையற்ற வரிசுமையை தவிர்க்கும் ஒரு முன்னேற்றமான படியாகக் கருதப்படுகிறது. வரிமுறைமைக்கு மீண்டும் நம்பிக்கையை உருவாக்க இது முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.
கருத்தை பதிவிட