முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் வாக்குமூலம் அளித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரது தந்தையுடன் தொடர்புடைய ஊழல் வழக்கில் ரமித் ரம்புக்வெல்லவை சந்தேக நபராக பெயரிட லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அண்மையில் நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
அதேவேளை, அவரது தந்தை, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும், இதே வழக்கின் தொடர்பில் ஜூன் 3, 2025 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது தந்தை சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், சேவை செய்யாத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க சுமார் 8 மில்லியன் ரூபாய் பொது நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக இந்த வழக்கு குற்றச்சாட்டுகளைக் கொண்டுள்ளது.
கருத்தை பதிவிட