ரூ.500,000 லஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று (22) ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மே 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, மேற்படி பொலிஸ் அதிகாரியை யாழ்ப்பாண சிறைக்கு மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம், பாதுகாப்புப் பிரிவுகளுக்குள் நிலவும் ஊழல் செயற்பாடுகள் மீதான கவனத்தை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மேலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கருத்தை பதிவிட