72வது உலக அழகிப் போட்டி தற்போது இந்தியாவின் ஐதராபாத்தில் நடந்து வருகின்றது. இப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனுடி குணசேகர, வரலாற்றில் முதன்முறையாக, Head-to-Head Challenge எனும் பகுதியில் ஆசியாவிலிருந்து முதல் 5-இல் இடம் பிடித்து, இத்தரத்திற்கு வந்துள்ள முதலாவது சிறிலங்கையராவர்.
இதில் மட்டுமல்லாது, Talent Round எனும் திறமையால் தேர்வாகும் சுற்றிலும் இறுதி போட்டியாளராகத் தேர்வாகியுள்ள அனுடி, இரண்டு சுற்றுகளிலும் இறுதி நிலைக்குள் நுழைந்த ஒரே ஆசிய போட்டியாளராக இந்த ஆண்டில் தனக்கென ஓர் அடையாளம் பதிந்துள்ளார்.
அனுடி, களனி பல்கலைக்கழகத்தில் இருந்து அண்மை (International Studies) BA (Hons) பட்டத்தை இரண்டாம் உயர் வகுப்புடன் (Second Upper) பெற்றவர். இவரது “Beauty With a Purpose” திட்டமான ‘Saheli’ ஊடாக, மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு மற்றும் தேவையான பொருட்கள் வழங்கல் வழியாக, நாட்டின் பல பாகங்களில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் பயனடைந்துள்ளனர்.
அனுடியின் Head-to-Head Challenge வெற்றி, அவருடைய திறமையான உரையாடல் திறனையும், சமூக நலத்துக்கான உறுதியையும் வெளிக்கொணர்கிறது. Saheli திட்டத்தின் ஊடாக, அவர் பெண்களின் உடல் நலத்தையும், வாழ்வதற்கான உரிமைகளையும் முன்னிலைப்படுத்தியுள்ளார்.
அனுடி குணசேகராவின் இந்த சாதனை, அழகுப் போட்டிகளை வெறும் வெளிப்புற அழகு மட்டுமல்லாமல், சமூக மாற்றத்துக்கான ஒரு மேடையாக பயன்படுத்தும் விதமான ஓர் முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.
கருத்தை பதிவிட