திருகோணமலையில் சற்றுமுன் நிகழ்ந்த கோர விபத்தில் இருவர் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில், கடல்முக சந்திக்கு அருகாமையில் இன்று (25 மே 2025) பிற்பகல் சற்றுமுன் பாரிய வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், இந்த விபத்தில் பலத்த காயமடைந்து திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து ஏற்பட காரணம் தற்போது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்தை பதிவிட