செர்கே பிரின் வழங்கிய ரூ.5,800 கோடி மதிப்பிலான கூகுள் பங்குகள் வரலாற்றிலேயே பெரிய நன்கொடையாகப் பதிவு
உலகத்திற் தொழில்நுட்ப துறையின் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் நிறுவனர்களில் ஒருவரான செர்கே பிரின், தனக்குச் சொந்தமான Alphabet நிறுவன பங்குகளில் 4.1 மில்லியனை நன்கொடையாக வழங்கியுள்ளதாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்த பங்குகளின் மொத்த மதிப்பு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள், அதாவது இலங்கை மதிப்பில் சுமார் ரூ.5,800 கோடி ஆகும். இது சமீபத்தில் வெளியான ஒழுங்குமுறை ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பங்குகள் Class A மற்றும் Class C வகையைச் சேர்ந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பங்குகள் எவருக்கு வழங்கப்பட்டன என்பதை அட்டவணையில் தெளிவாகக் குறிப்பிடவில்லை. எனினும், இது செர்கே பிரின் தலைமையிலான தொண்டு அறக்கட்டளைகள், நம்பிக்கை நிதிகள் அல்லது சமூக நலவாழ்வுக்கான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
செர்கே பிரின் கடந்த ஆண்டுகளிலும் பல முறை பெரும் அளவிலான நன்கொடைகளை வழங்கியுள்ளார். 2023ஆம் ஆண்டு கூகுளின் AI தேடல் செயலியின் அறிமுகத்துக்குப் பிறகு மட்டுமே அவர் 600 மில்லியன் டொலர் அளவிலான பங்குகளை நன்கொடையாக வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டிலும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் கூடுதல் பங்குகள் வழங்கப்பட்டன.
செர்கே பிரின், பார்கின்சன்ஸ் நோய்க்கான ஆராய்ச்சி, காலநிலை மாற்றம் மற்றும் உலகளாவிய சுகாதார மேம்பாடு போன்ற துறைகளில் பல்வேறு தொண்டு முயற்சிகளை தொடர்ந்து ஆதரித்து வருகிறார்.
தொழில்நுட்பத் துறையில் வெற்றிகொண்டு உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக உள்ளவர், சமூகப் பொறுப்புணர்வுடன் இவ்வாறான மாபெரும் நன்கொடைகளை வழங்குவது உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டு எனக் கூறலாம்.
கருத்தை பதிவிட