முகப்பு இலங்கை வட மாகாணத்தில் USD 2.8 மில்லியன் புதிய வேலை வாய்ப்பு திட்டம்!
இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

வட மாகாணத்தில் USD 2.8 மில்லியன் புதிய வேலை வாய்ப்பு திட்டம்!

பகிரவும்
பகிரவும்

யாழ்ப்பாணம் | மே 29 – வட மாகாணத்தில் வாழும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வேலை வாய்ப்புகள், சமூக சுதந்திரம் மற்றும் காலநிலை நெகிழ்வுத் தன்மையை உருவாக்கும் நோக்குடன்,  2.8 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான GROW (Generating Resilient Opportunities for Work) எனும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) முன்னிலையில், அவுஸ்திரேலிய அரசினதும் நார்வே அரசினதும்  நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படுகின்றது.

வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், அவுஸ்திரேலிய தூதுவர் பால் ஸ்டீபன்ஸ் மற்றும் நார்வே தூதரகத்தின் பிரதிநிதி மார்டின் ஆம்டால் போத்தெயிம் ஆகியோர் இணைந்து திட்டத்தை சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் தொடங்கி வைத்தனர்.

யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தில், 75,000க்கும் மேற்பட்ட பெண் தலைமையிலான குடும்பங்கள், 21,000க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பலரும் இன்னும் வாழ்வாதார சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், GROW திட்டம் நேரடியாக இந்தக் குழுக்களை இலக்காகக் கொண்டு செயல்பட உள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாக

  • காலநிலை நெகிழ்வுத்தன்மை கொண்ட விவசாயம் மற்றும் நீர்வாழ் உயிரியல் வளர்ப்பு

  • சமூக உள்ளடக்கம் மற்றும் சக்திவாய்மை மேம்பாடு

  • சந்தை அமைப்புகளை வலுப்படுத்தல் மற்றும் தொழில் வாய்ப்புகள் உருவாக்கல் போன்றன உள்ளடங்குகின்றன.

இத்திட்டம், ILO-வின் கடந்த LEED, LEED+, EGLR மற்றும் PAVE போன்ற வேலை வாய்ப்பு திட்டங்களின் வெற்றியினை அடிப்படையாகக் கொண்டு, 2025 முதல் 2028 வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

 இத்திட்டம் தொடர்பாக வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கூறுகையில் “அவுஸ்திரேலியா மற்றும் நார்வே அரசுகளின் ஒத்துழைப்புடன், நமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது. GROW திட்டம் சமவாய்ப்பையும், காலநிலைத் திறனையும் முன்னிறுத்தும் முக்கிய முயற்சியாகும்.”

அவுஸ்திரேலிய தூதுவர் பால் ஸ்டீபன்ஸ் கருத்து கூறுகையில் “இலங்கையுடன் நாம் பேணும் அபிவிருத்தி கூட்டாண்மையை GROW திட்டம் மேலும் வலுப்படுத்தும். வடமாகாணத்தில் நாங்கள் இதற்கு முந்தைய பல திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்; தற்போது அவற்றின் நீட்சி இந்தத் திட்டமாகும்.” என்ன தெரிவித்திருந்தார்.

 அதேபோன்று நார்வே தூதரகத்தின் பிரதிநிதி மேலும் கூறுகையில் “GROW திட்டம் வடமாகாண மக்களின் வாழ்க்கையில் நேரடி மாற்றங்களை ஏற்படுத்தும் திறனுடையது என நாங்கள் நம்புகிறோம்.” என தெரிவித்தார்

நிதி விபரம்:

  • அவுஸ்திரேலிய அரசால் வழங்கப்படும் தொகைUSD 1.9 மில்லியன்

  • நார்வே அரசின் பங்களிப்புUSD 900,000

இந்தத் திட்டம், வட மாகாண மக்களின் நீண்டகால வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வாக மட்டுமல்லாது, அவர்களின் அதிகாரமயமாக்கலுக்கும், சமூக நீதிக்கும் ஒரு புதிய ஆரம்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...