முகப்பு இலங்கை சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர முடிவு – முக்கிய மருத்துவ சேவைகள் பாதிப்பு!
இலங்கைசெய்திசெய்திகள்

சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர முடிவு – முக்கிய மருத்துவ சேவைகள் பாதிப்பு!

பகிரவும்
பகிரவும்

2025 ஜூன் 6 | தமிழ்தீ பிரதிநிதி

இலங்கையிலுள்ள துணை சுகாதார ஊழியர்கள் (Supplementary Medical Professionals), தங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் தற்போது வரையிலும் தீர்வு காணப்படாத நிலையில், வேலைநிறுத்தத்தை இரண்டாவது நாளாகவும் தொடர முடிவு செய்துள்ளனர்.

இந்த வேலைநிறுத்தத்தில் மருத்துவ ஆய்வக நிபுணர்கள், மருந்தக ஊழியர்கள்,  கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட ஐந்து முக்கிய பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

  • பதவி உயர்வுகளில் உள்ள தாமதம்

  • பட்டதாரி நியமனங்களில் உள்ள சிக்கல்கள்

  • ஊதிய, அனுமதித் திட்டங்களில் ஏற்பட்ட முரண்பாடுகள்

  • ஓய்வூதிய நிபந்தனைகளின் மேம்பாடு

  • பயிற்சி மற்றும் இடமாற்ற சிக்கல்கள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணி பகிஸ்தாரிப்பில் ஈடுபட்டனர்

இவை தொடர்பான அரசாங்கத்தின் தொடர்ந்தும் அமைதியான நிலைபாடே, இந்நிலைமைக்கு காரணமென சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, காலுபோவில, கண்டி, யாழ்ப்பாணம், அனுராதபுரம், மாத்தறை, வவுனியா உள்ளிட்ட பல மாவட்ட மருத்துவமனைகளில் CT ஸ்கேன், இரத்த பரிசோதனை, மருந்து விநியோகம், ICU பராமரிப்பு போன்ற முக்கிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

புற்றுநோய் வைத்தியசாலை, மகப்பேறு மற்றும் சிறார்க் காப்பு வைத்தியசாலை, சிறுநீரக வைத்தியசாலை, மத்திய இரத்த வங்கி போன்ற முக்கியம்செய்யும் கட்டமைப்புகள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.

சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிசா கூறுகையில்.”ஊழியர்கள் முதலில் பணிக்கு திரும்பினால் மட்டுமே பேசுவதற்கு தயாராக இருக்கிறோம்.” என்றார்.

JCPSM சங்கம் இதற்கு பதிலளிக்கையில் “அமைச்சின் நிர்வாகத் தவறுகளும், அரசியல் தலையீடுகளுமே நாங்கள் இந்த நிலைமைக்கு வர காரணமாகும்,” எனக் குற்றம்சாட்டியுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...