கொழும்பு – 12 ஆனி 2025
அரசாங்க பேச்சாளரும் ஊடக அமைச்சருமான டாக்டர் நலிந்த ஜயதிச்ஸா அவர்களி சமீபத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து அதில் எழுந்த கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளதாக இன்று அறிவித்தார்.
அமைச்சரவை முடிவுகள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், “இது அரசியல் நோக்கமற்ற, சட்ட நெறிப்படையான நடவடிக்கை” என்றும், நாட்டில் சட்ட ஒழுங்கு மீதான நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருப்பதாகவும் வலியுறுத்தினார்.
மக்களின் நம்பிக்கை, நீதியின் வழியே மீள்கொடுக்கப்படும் எனவும், தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதிபடக் கூறினார்.
விசாரணையின் அடுத்த கட்ட தகவல்கள், உதவி காவல்துறை அத்தியட்சகர் அவர்களிடமிருந்து வெளியான பிறகு நாடாளுமன்றத்தில் மற்றும் மக்களிடையே பகிரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்தை பதிவிட