முகப்பு உலகம் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடி – இரு நாடுகளும் நேரடி மோதல்!
உலகம்செய்திசெய்திகள்

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடி – இரு நாடுகளும் நேரடி மோதல்!

பகிரவும்
பகிரவும்

மத்திய கிழக்கு பகுதிகளை அதிரவைக்கும் வகையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகள் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளன. ஈரானின் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து இஸ்ரேல் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாக, சனிக்கிழமை ஈரான் பல ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேலின் முக்கிய நகரங்களின் மீது நடத்தியது. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) இஸ்பஹான் உள்ளிட்ட ஈரானின் முக்கிய அணு நிறுவனங்களை இரண்டாவது முறையாக தாக்கியதை அடுத்து, ஈரான் இந்த பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டது.

இஸ்ரேலின் பல பகுதிகளில் விமானப்படை எச்சரிக்கை அலாரங்கள் ஒலிக்க, மக்கள் பாதுகாப்பு தஞ்சங்களுக்கு ஓடினர். ஜெருசலமில் வெடிப்புகள் கேட்கப்பட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. தெல்அவிவின் மையத்தில் உள்ள உயரமான கட்டிடமொன்று தாக்கப்பட்டதாகவும், அருகிலுள்ள ரமாத் கான் பகுதியில் ஒரு குடியிருப்பு கட்டிடம் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் இரண்டாவது தாக்குதலின் போது, ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும், மெஹ்ராபாத் விமான நிலையம் அருகிலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஈரானின் அரச ஆதரவு செய்தி நிறுவனமான Mehr News Agency தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த பதிலடி தாக்குதல்களின் நேரத்தில், ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமனெயி, தொலைக்காட்சியில் தேசிய உரையாற்றியபோது, “இஸ்ரேல் தங்களைத் தாக்கியதும் இப்போது முடிந்துவிடும் என்று யாரும் நினைக்க வேண்டாம். அவர்கள் போரத்தைத் துவக்கியுள்ளனர். அவர்கள் செய்த இந்த பெரிய குற்றத்திலிருந்து தப்ப முடியாது” என்று கடுமையான எச்சரிக்கை செய்தார். கமனெயி வெள்ளிக்கிழமைதான் இஸ்ரேலின் தாக்குதலுக்கு உறுதியான பதில் அளிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

இஸ்ரேல் வெள்ளிக்கிழமை தெஹ்ரான், கர்மன்ஷா, தப்ரிஸ் ஆகிய நகரங்களைத் தவிர, ஈரானின் முக்கிய அணுசக்தி வளர்ச்சி மையமான நடான்ஸையும் தாக்கியது. அந்த தாக்குதல்களில் குறைந்தது 78 பேர் உயிரிழந்ததாகவும், 320 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஈரான் சார்பாக ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் சயீத் இரவானி, ஈரானின் அரச செய்தி நிறுவனமான IRNA-வுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு நாடுகளும் நேரடி தாக்குதல்களில் ஈடுபடுவது, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் தீவிரமாக்கும் அபாயத்தில் உள்ளதாகவும், உலக நாடுகளும் வருங்காலங்களில் தங்களது பதில்களை வெளியிடலாம் எனவும், சர்வதேச வட்டாரங்கள் கூறுகின்றன.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...