முகப்பு அரசியல் ஜெனிவாவில் உச்ச மட்ட பேச்சுவார்த்தை: ஈரான் அணு திட்டத்தைத் தணிக்க ஐரோப்பா, அமெரிக்கா முயற்சி!
அரசியல்உலகம்செய்திசெய்திகள்

ஜெனிவாவில் உச்ச மட்ட பேச்சுவார்த்தை: ஈரான் அணு திட்டத்தைத் தணிக்க ஐரோப்பா, அமெரிக்கா முயற்சி!

பகிரவும்
பகிரவும்

பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், ஈரானின் பிரதிநிதியான அப்பாஸ் ஆராக்சியுடன் வரும் வெள்ளிக்கிழமை ஜெனிவாவில் சந்தித்து பேச உள்ளனர். டெஹ்ரானின் அணுசக்திதிட்டத்தின் மீதான மேலும் அதிகரித்து வரும் பதற்றங்களைத் தணிக்க, சர்வதேச முயற்சிகள் தீவிரமாகின்றன.

இந்த பேச்சுவார்த்தைகள் நடக்கவிருக்கின்ற நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா இணையுமா என்பதை இரு வாரங்களில் தீர்மானிப்பதாக தெரிவித்தார். இதே சமயம், அமெரிக்கா தனது நேரடி தலையீட்டை பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“ஈரானை தாக்குவதற்கான முடிவை அமெரிக்க ஜனாதிபதி இரண்டு வாரங்களில் எடுப்பார், என வெள்ளிக்கிழமை வெள்ளைமாளிகை தெரிவித்தது. இந்நேரமும் டெஹ்ரானுடன் தொடர்பு நீடித்து வருகின்றது. “தாராளமான ஒரு தீர்வை எட்டும் வாய்ப்பு இன்னும் உள்ளது,” என்றும் கூறப்பட்டது.

2013ஆம் ஆண்டு ஈரானும் உலக சக்திகளும் அணுசக்தி நடவடிக்கையை கட்டுப்படுத்த உடன்படிக்கை செய்துகொண்ட இடமான ஜெனிவா நகரமே தற்போது இந்த புதிய பேச்சுவார்த்தைகளுக்குத் தளமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் ஜனாதிபதி தூதுவர் ஸ்டீவ் விட்காஃபுடன் வாஷிங்டனில் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு, பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி, “மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் சூழ்நிலை மிகவும் அபாயகரமானதாக உள்ளது” என கூறினார்.

“நாங்கள் ஒரு உடன்படிக்கையின் மூலம் இந்த மோதலை மேலும் தீவிரமாகாமல் தடுக்கும் வழிகளை விவாதித்தோம். அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஒரு தாராளமான தீர்வை எட்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது,” என லாமி தெரிவித்தார்.

ஜெனிவாவில் உள்ள ஐநா அமைப்பில் ஈரானின் தூதுவரான அலி பஹ்ரைனி, யூரோநியூஸுக்கு அளித்த பேட்டியில், “ஐரோப்பிய நாடுகள் குறைந்தது இஸ்ரேலை வெளிப்படையாக கண்டனம் செய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்கும் ஆதரவையும் நிறுத்த வேண்டும்,” எனக் கூறினார்.

இதேவேளை, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், “ஈரானின் உச்ச சமயத்தலைவர் இனி உயிருடன் இருக்க அனுமதிக்க முடியாது,” எனக் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் தொடரும் சூழ்நிலை இப்படி இருக்கிறது.

மூலம்: அத தேரன

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...