முகப்பு இலங்கை பாடசாலைகளில் டிஜிட்டல் கற்றல் முறை நடைமுறைக்கு வரவேண்டும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!
இலங்கைகல்விசெய்திசெய்திகள்

பாடசாலைகளில் டிஜிட்டல் கற்றல் முறை நடைமுறைக்கு வரவேண்டும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

பகிரவும்
பகிரவும்

6 முதல் 13ஆம் தரம் வரையிலான மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வி மாற்றத்துக்கான பணிக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், டிஜிட்டல் கல்விக்கான மாற்றத்தை ஆரம்பிப்பது, அதனுடன் தொடர்புடைய சவால்களை சமாளிப்பது மற்றும் சரியான விதிமுறைகள் மற்றும் திட்டங்களை உருவாக்குவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

பாடசாலைகளில் சம வாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனவும், ஆசிரியர்கள், கருவிகள் மற்றும் பிற வளங்கள் அனைத்துப் பாடசாலைகளுக்கும் சமமான முறையில் வழங்கப்பட வேண்டிய தேவை இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளில் தற்போது 42,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் இடங்கள் வெறுமையாக உள்ளன என்பதையும், இந்தக் குறைபாடு அவசரமாக தீர்வடைய வேண்டியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாசிய நிலையை சீர்செய்ய குறுகிய கால தீர்வாக, அடுத்த 6 மாதங்களுக்குள் டிஜிட்டல் கற்றல் முறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார். இது, பாடசாலைகளில் ஏற்கனவே உள்ள வளங்களை மேம்பட்ட முறையில் பயன்படுத்தி மாணவர்களுக்கு உள்ள கற்றல் இடைவெளியை குறைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், அனைத்துப் பாடசாலைகளும் – குறிப்பாக மாற்றுத் திறனாளிகள் கல்வி பெறும் பாடசாலைகள் – சமஅளவில் கற்றல் வசதிகளை பெறுதல் இந்த திட்டத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.

இதனை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக, பல துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் இணைந்து செயற்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும், அதற்கான வலுவான குழுவொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜயநந்த வர்ணவீர மரணம்!

  கொழும்பு: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பந்துவீச்சாளருமான ஜயநந்த வர்ணவீர இன்று (16) காலமானார். அவருக்கு 64...

இலங்கையில் குழந்தைகள் மீதான உடல் தண்டனைகள் உயரும் நிலையில் — மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர எச்சரிக்கை!

இலங்கையில் குழந்தைகள் மீது நிகழும் உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இலங்கை மனித...

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இந்தியப் பயணம் ஆரம்பம்!

கொழும்பு, அக்டோபர் 16: இலங்கையின் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இன்று அதிகாலை இந்தியாவிற்கான...

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...