முகப்பு இலங்கை யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடுகதி புகையிரத சேவை தினசரி சேவையாக மாற்றம்!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்பொருளாதாரம்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடுகதி புகையிரத சேவை தினசரி சேவையாக மாற்றம்!

பகிரவும்
பகிரவும்

இதுவரை வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) மாத்திரம் இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி புகையிரத சேவை, எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதியிலிருந்து தினசரி சேவையாக செயல்படுத்தப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலையத்தின் அத்தியட்சகர் ரீ. பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (26) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், பொதுமக்களினதும் புகையிரத திணைக்களத்தினதும் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புதிய கால அட்டவணை இவ்வாறு உள்ளது:

  • கல்கிசை புகையிரத நிலையத்திலிருந்து காலை 5.15 மணிக்கு கடுகதி புகையிரதம் புறப்படும்.

  • கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு,

  • மதியம் 11.49 மணிக்கு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை வந்தடையும்.

  • பின்னர், மதியம் 12.13 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை சென்றடையும்.

திரும்பும் பயணம்:

  • மாலை 1.50 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும்.

  • மாலை 2.12 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு,

  • இரவு 8.33 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை,

  • மற்றும் இரவு 8.55 மணிக்கு கல்கிசை புகையிரத நிலையத்தை சென்றடையும்.

மேலும், இந்த சேவைக்கான ஆசன முன்பதிவுகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, புகையிரத திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் ஊடாக முன்பதிவுகளை மேற்கொள்ளலாம் எனவும் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இதுவரை கொழும்பிலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு வந்த யாழ் தேவி புகையிரதம், ஜூலை 7ஆம் திகதியிலிருந்து காலை 6.35 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி...

பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு – இறப்பு எண்ணிக்கை 50 ஐ தாண்டியது!

இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 19.08.2025 மலும்பாஷி மாவட்டத்தில் உள்ள உங்குவான் மண்டாவ் கிராமத்தில் முஸ்லிம்கள்...

யாழ் பாடசாலைகளுக்கு நாளை 21.08.2025 விடுமுறை!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை (21) யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு...

கிரிப்டோ வர்த்தகம் தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கில்.

ஆகஸ்ட் 19 ஆம் திகதியிலிருந்து  கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன, ஏனெனில் சந்தை...