சிலோன் பெட்ரோலியக் கழகம் (CPC) இன்று (30) நள்ளிரவுக்குப் பிறகு அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை மாற்றம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த மாற்றத்தின் படி, சில முக்கிய எரிபொருள்களின் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.
எரிபொருள்களின் விலை மாற்றங்களின் விபரம் வருமாறு:
🔺 பெட்ரோல் 92 ஒக்டேன் – ஒரு லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டு, புதிய விலை ரூ.305
🔺 ஆட்டோ டீசல் – ரூ.15 உயர்வுடன், புதிய விலை ரூ.289
🔺 மண் எண்ணெய் (Kerosene) – ரூ.7 உயர்த்தப்பட்டு, புதிய விலை ரூ.185
இதேவேளை, பெட்ரோல் 95 ஒக்டேன் மற்றும் சூப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகள் மாறாமல் உள்ளன.
🔸 பெட்ரோல் 95 ஒக்டேன் – ரூ.341 (மாற்றமில்லை)
🔸 சூப்பர் டீசல் – ரூ.325 (மாற்றமில்லை)
இந்த விலை மாற்றங்களை தொடர்ந்து, லங்கா IOC நிறுவனமும் சேய்பெட்கோ (Ceypetco) விலைகளுடன் ஒத்துப் போவதற்காக தங்களது விற்பனை விலைகளில் மாற்றங்களை செய்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வால் பொதுமக்களுக்கும், போக்குவரத்து சேவைகளுக்கும் மீண்டும் சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கருத்தை பதிவிட