கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பகுதியில் இன்று (30) இடம்பெற்ற ஒரு கொடூரமான விபத்தில் மோட்டார் சைக்கிளும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டும் தீப்பிடித்து எரிந்துள்ளன.
இந்தக் கொடூர விபத்து, மன்னார் வீதியில் அமைந்துள்ள பூநகரி மத்திய கல்லூரிக்கு அருகாமையில், இன்று முற்பகல் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளும் வேனும் முற்றிலும் தீக்கிரையாக எரிந்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பூநகரி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஐந்து பேர் கடும் காயங்களுக்கு உள்ளாக்கியத்துடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை வடடாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்தை பதிவிட