முகப்பு உலகம் சுவிஸ் எபெறெற்றிக்கோனில் இடம்பெற்ற பெருந்தீ விபத்து!
உலகம்சமூகம்செய்திசெய்திகள்

சுவிஸ் எபெறெற்றிக்கோனில் இடம்பெற்ற பெருந்தீ விபத்து!

பகிரவும்
பகிரவும்

சுவிஸின் சூரிச் மாவட்டத்தில் உள்ள எபெறெற்றிக்கோன் கிராமத்தில் இன்று இடம்பெற்ற தீ விபத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் இடம்பெற்ற வீடு, பாரிய அளவிலான தீயால் முழுவதுமாக கருகி அழிந்துள்ளது.

தீவிபத்துக்குப் பின்னரே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நீரை பீச்சியடித்து தீயை கட்டுப்படுத்தியதுடன், தீ பரவுவதைத் தடுத்து நிறுத்தினர்.

சம்பவத்துக்கான முக்கியக் காரணமாக கடும் வெப்பநிலை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வெப்பம் காரணமாக வீட்டின் கூரையில் ஏற்பட்ட தீப்பற்றல், குறுகிய நேரத்திலேயே முழு வீடிற்கும் பரவியுள்ளது.

சம்பவத்தின்போது சுமார் 200 மீற்றர் தூரத்தில் இருந்து இந்த தீ விபத்தை நேரில் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த வே.கேசவன்  தனது Facebook தளத்தில் தெரிவித்ததாவது:

“வீடில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியது. எங்கள் இடத்திலிருந்தே அதன் வெப்பத்தை உணர முடிந்தது. அது மிகவும் அச்சுறுத்தலாக இருந்தது.” என்றார்.

தற்போது சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பது முதல் தகவல்.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தி கைது – கணேமுல்ல சஞ்சீவா கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

நேபாளத்தின் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற விமானம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30...

நேபாளத்தில் பிடிபட்டார் ஈஷாரா செவ்வந்தி!

இலங்கை அதிர்ச்சியில் ஆழ்த்திய குற்றவாளி “கணேமுள்ள சஞ்சீவா” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர் ஈஷாரா...

ஆப்கானிஸ்தானின் எல்லைப் போராட்டம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கண்டனம் மற்றும் வலுவான பதில்தீர்மானம்!

இஸ்லாமாபாத், அக்டோபர் 12: ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இடம்பெற்ற இரவு நேர மோதல்களில் 58 பாகிஸ்தான்...

வருட முடிவுக்குள் தேயிலைத் தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.1,750 ஆக உயர்த்தப்படும் – ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க அறிவிப்பு!

பண்டாரவள, அக்டோபர் 12:இந்த ஆண்டின் முடிவுக்கு முன் தேயிலைத் தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.1,750 ஆக உயர்த்தப்படும்...