தாய்லாந்து அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமொன்றில், பிரதமர் பாய்டொங்க்டார்ன் ஷினவத்ரா அவர்கள் பதவியில் இருந்து இடைநிறைவை எதிர்நோக்கியுள்ளார்.
இது தொடர்பாக கம்போடியாவின் முன்னாள் தலைவருடன் நடைபெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒன்று, ஊடகங்களில் கசியியது. இந்நிலையில், அரசியலமைப்பு நீதிமன்றம் மேற்கொண்டு அவருக்கு எதிரான ஒழுக்கநெறி மீறல் முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 1), நீதிபதிகள் ஒருமனதாக வழக்கை ஏற்கத் தீர்மானித்துள்ளதுடன், 7க்கு 2 வாக்குகளால், பிரதமரை பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளனர்.
இந்த விவகாரம், தாய்லாந்தும் கம்போடியாவும் இடையிலான எல்லை முரண்பாடுகளை மையமாகக் கொண்டுள்ளது. மே 28ஆம் திகதி ஏற்பட்ட ஆயுத மோதலில் ஒரு கம்போடிய இராணுவ சிப்பாய் உயிரிழந்த நிலையில், அந்த தருணத்தில் நடந்ததாகக் கூறப்படும் பிரதமரின் உரையாடல் தான் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, அரசியல் எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலர் பிரதமரின் பதவியிலிருந்து விலகல் கோரியிருந்தனர்.
இந்நிலையில், தாய்லாந்தின் மன்னர், அரசாங்கத்தில் புதிய அமைச்சர்களை நியமிக்க அனுமதி வழங்கியுள்ளார்.
இது, பிரதமரின் தொலைபேசி உரையாடல் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட கூட்டணி அரசாங்கத்தில் ஏற்பட்ட குழப்பத்தை சமாளிக்க மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றமாகவே கருதப்படுகிறது.
இந்நிலையில் பிரதமருக்கு எதிரான விசாரணை தொடரும் வரை அவர் கடமைகள் செய்வதை நீதிமன்றம் தடை செய்துள்ளது. இந்த நிலைமை, தாய்லாந்தின் அரசியல் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கக்கூடியதாக அமைந்துள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
Source:AP
கருத்தை பதிவிட