மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் சுக்கர்பெர்க், தனது நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவை “சூப்பர் இன்டெலிஜன்ஸ்” நோக்கில் புதியதாக்கம் செய்யும் வகையில் மறுசீரமைத்துள்ளார். இதற்காக Meta Superintelligence Labs என்ற புதிய பிரிவை உருவாக்கியுள்ளார். இதன் தலைமையை Scale AI நிறுவனத்தின் முன்னாள் தலைவர் Alexandr Wang வகிக்கிறார். சுக்கர்பெர்க், Scale AI நிறுவனத்தில் 49% பங்குகளை வாங்க 15 பில்லியன் டொலர் முதலீடு செய்துள்ளார்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, OpenAI நிறுவனத்தில் இருந்து நான்கு முக்கிய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மொத்தமாக 11 நிபுணர்கள் மெட்டாவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் Google மற்றும் Anthropic நிறுவனங்களின் முன்னாள் ஊழியர்களும் ஆவர். OpenAI தலைவர் சாம் ஆல்ட்மன், சுக்கர்பெர்க் OpenAI ஊழியர்களை ஈர்க்க $100 மில்லியன் ஊதியப் பிரமாணங்களை வழங்குகிறார் என கூறியிருந்தார். ஆனால் மெட்டாவின் CTO ஆன Andrew Bosworth, இது உண்மையல்ல என எதிர்வாதம் செய்தார்.
மேலும் OpenAI நிறுவனத்தை சேர்ந்த Lucas Beyer என்பவரும் Alexander Kolesnikov மற்றும் Xiaohua Zhai ஆகிய இருவரும் மெட்டாவுடன் இணைந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான பின்பு, மெட்டா நிறுவனத்தின் பங்குகள் வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த மாற்றம், மெட்டா நிறுவனத்தின் AI வளர்ச்சியில் முக்கியமான ஒரு கட்டமாகக் கருதப்படுகிறது.
கருத்தை பதிவிட