யாழ் நகரின் முற்றவெளிக்கு அருகே உள்ள பண்ணை வீதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு பாரிய குன்றும் குழிகளுடன் காணப்படுகின்றது. யாழ் நகரின் மையப் பகுதியாக அமைந்துள்ள இந்த வீதியினை தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான வாகனங்கள் பல ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் பயன்படுத்தி வரும் இந்த வீதி மிகவும் மோசமான நிலையிலேயே பாதிக்கப்பட்டு காணப்படுகின்றது. இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில் “நாம் நமது பிள்ளைகளை இப்பாதையினூடாகவே பாடசாலை அளைத்துச் செல்கின்றோம் இவ்விதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன அதனால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது என தெரிவித்தனர்” அது மட்டுமன்றி வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் மாநகர சபை உத்தியோகத்தர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் அனைவரும் தினமும் இந்த பாதைகளின் ஊடாகவே குழிகளில் விளுந்தும் எறியும் செல்கின்றார்கள் இந்த வீதி நகரின் மையப் பகுதியில் அமைந்திருந்தாலும் இதுவரை யாரும் அதை திருத்துவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தனர்”. இந்த வீதி குன்றும் குழியுமாக இருப்பதனால் பல விபத்துகளும் அசம்பாவிதங்களும் இடம்பெற சந்தர்ப்பங்கள் உள்ளன. அது மட்டுமன்றி நகரின் அழகும் தரமும் கெட்டுப் போகின்றது மக்கள் அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றார்கள் எனவே சம்பந்தப்பட்ட திணைக்களம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமா?
கருத்தை பதிவிட