கொழும்பு | ஜூலை 8, 2025:
தற்போது இலங்கை காவல்துறையில் 28,000க்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன என பொதுச் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, இக்காலிப்பணியிடங்களில் முதற்கட்டமாக 5,000 பணியிடங்களுக்கு உடனடி நியமனம் மேற்கொள்வதற்கான அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளதுடன் அதற்கான அறிவிப்பு (Gazette Notification) தற்போது வெளியிடப்பட்டுள்ளதுமாகும் என தெரிவித்தார்.
உப காவல் பரிசோதகர் (Sub Inspector) மற்றும் காவல் கான்ஸ்டபிள் (Police Constable) பதவிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கீழ்தர காவல் அதிகாரிகளுள் 5,000 பேருக்கு பதவி உயர்வு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பரிசோதகர் நிலை அதிகாரிகள் 1,500 பேருக்கும் பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம், காவல்துறையின் ஆட்சித் திறனை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
கருத்தை பதிவிட