முகப்பு உலகம் விசா இல்லாமல் சீனாவுக்குள் – 74 நாடுகளுக்கான புதிய வாய்ப்பு!
உலகம்செய்திசெய்திகள்பொருளாதாரம்

விசா இல்லாமல் சீனாவுக்குள் – 74 நாடுகளுக்கான புதிய வாய்ப்பு!

பகிரவும்
பகிரவும்

சீனா தன் விசா விதிகளை தளர்த்தியதற்குப் பிறகு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீண்டும் வர ஆரம்பித்துள்ளனர்.

இப்போது 74 நாடுகளின் குடிமக்கள் விசா இல்லாமலேயே 30 நாட்கள் சீனாவுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இது முந்தைய சட்டங்களுடன் ஒப்பிடுமிடத்து பெரிய மாற்றமாகும்.

சுற்றுலாவையும், பொருளாதார வளர்ச்சியையும் சீனாவின் உலகளாவிய செல்வாக்கையும் உயர்த்துவதற்காக சீன அரசு இவ்வாறு விசா இல்லாத நுழைவுத் திட்டங்களை விரிவுபடுத்தி வருகிறது.

2024-ம் ஆண்டு மட்டும் 2 கோடிக்கு அதிகமான வெளிநாட்டு பயணிகள் விசா இல்லாமல் சீனாவுக்குள் வந்துள்ளனர். இது மொத்த பயணிகளின் மூன்றில் ஒரு பங்காகும். 2023-இல் இது 1.38 கோடியாக இருந்தது. 2019-இல் (கோவிட்க்கு முந்தைய ஆண்டு) 3.19 கோடி உல்லாசப்பயணிகள் வந்திருந்தார்கள்.

2023 டிசம்பரில் சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் மலேசியா நாட்டவர்களுக்கு விசா இல்லாமல் நுழைவு வசதி அளித்தது. அதற்குப் பிறகு பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளும் இதில் சேர்க்கப்பட்டன.

இதே மாதம் ஐந்து லத்தீன் அமெரிக்க நாடுகள், உஸ்பெகிஸ்தான், மற்றும் நான்கு மத்தியகிழக்கு நாடுகள் சேர்க்கப்பட்டன. ஜூலை 16-ல் அசர்பைஜானும் சேர்க்கப்படும், எனவே மொத்தமாக 75 நாடுகள் ஆகும்.

“இந்த புதிய விசா கொள்கைகள் எங்களுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கின்றன,” என WildChina நிறுவனத்தின் இயக்குநர் ஜெனீ ஜாவோ கூறினார். இந்த நிறுவனம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கான சிறப்பு மற்றும் பணக்கார பயண திட்டங்களை ஏற்பாடு செய்கிறது.

கோவிட்க்கு முன் காலத்தை ஒப்பிடும் போது, தற்போது அவர்களின் வியாபாரம் 50% அதிகரித்துள்ளது. அமெரிக்கா இன்றும் அவர்களது முக்கிய சந்தையாக இருந்து வருகிறது (30%). ஆனால் ஐரோப்பிய பயணிகள் 15–20% வரை உயர்ந்துள்ளனர். 2019 க்கு முன்பு இது 5% இற்குள் தான் இருந்தது.

“நாங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் பார்க்கிறோம்,” என ஜாவோ கூறினார். “இந்த நன்மைகள் தொடரும் என நம்புகிறோம்” எனவும் தெரிவித்தார்.

இலங்கை இந்தியா போன்ற தென்னாசிய நாடுகல் இந்த இலவச விசா திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

🇺🇸 டெக்சாஸில் திடீர் வெள்ளம் – 75 பேர் உயிரிழப்பு, இன்னும் பலரைக் காணவில்லை

மத்திய அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள்...

அவசரமாக தரையிறக்கப்பட்ட சுவிஸ் விமானம்- பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது!

சுவிஸ் பெல்கிரேடிலிருந்து சூரிச் செல்லும் சுவிஸ் விமானம் (LX1413)  இன்று காலை  அவசரமாக தரையிறக்கப்பட்டது. காலை...

வெலிமடையில் இரட்டைத் துயரம்-உமா ஓயா நதியில் சம்பவம்.

வெலிமட – உமா ஓயாவின் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் துயரமான நிலையில் காணாமல் போயிருந்தனர்....

2026 ம் ஆண்டு கல்வி மறுசீரமைப்பில் தொழிற்பயிற்சிக்கு சிறப்பு இடம்!

இன்று (04) முதல் அமைச்சர் டொக்டர் ஹரினி அமரசூரிய கம்பஹா தொழில்நுட்ப கல்லூரிக்கு விஜயம் ஒன்றை...