முகப்பு இந்தியா ஜூன் 12 ஆம் திகதி ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தின் காரணம் வெளியாகியுள்ளது!
இந்தியாஉலகம்செய்திசெய்திகள்

ஜூன் 12 ஆம் திகதி ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தின் காரணம் வெளியாகியுள்ளது!

பகிரவும்
பகிரவும்

தமிழ்த்தீ- 
ஜூன் 12 ஆம் திகதி அகமதாபாத் நகரிலிருந்து புறப்பட்டு இலண்டனை நோக்கிச் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் மேலெழுந்த சில விநாடிகளுக்குப் பின்னர் பெரும் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்துள்ளனர்.

எஞ்சின்களுக்கு எரிபொருள் வழங்கும் விநியோகம் துண்டிக்கப்பட்டதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இதனை இந்திய விமான விபத்து விசாரணை ஆணைக்குழு (AAIB) வெளியிட்ட ஆரம்ப அறிக்கை தெரிவிக்கிறது.

போயிங் 787 ட்ரீம்லைனர் வகையைச் சேர்ந்த AI171 என்ற விமானம், புறப்படும் போது மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் இருந்தபோதே, இரண்டு எஞ்சின்களுக்கும் எரிபொருள் வழங்குவதை கட்டுப்படுத்தும் சுவிட்சுகள் தவறுதலாக CUTOFF நிலையில் மாற்றப்பட்டன.

விமானம் தரையிலிருந்து கொஞ்சம் உயர்ந்ததும், அதற்கேற்ப Ram Air Turbine எனப்படும் அவசர மின் சக்தி கருவி இயங்கத் தொடங்கியது. எஞ்சின்களை மீண்டும் இயக்க முயற்சித்தபோது, திடீரென “Mayday Mayday Mayday” என ஒரு பைலட் உரத்தகுரலில் கூச்சல் விடுத்துள்ளார். ஆனால் விமான கட்டுப்பாட்டு மையத்திலிருந்து அழைக்கப்பட்டபோது, பதில் ஏதும் இல்லை. சில நிமிடங்களிலேயே, விமானம் பீ.ஜே. மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் விடுதி வளாகத்தில்  விழுந்து நொறுங்கியது.

ஒருவருக்கு மட்டும் உயிர்தப்பினார்
அந்த விமானத்தில் இருந்த 242 பயணிகள் மற்றும் பணியாளர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் உயிரிழந்தனர். மேலும் தரையில் இருந்த பலரும் விமானம் வீழ்ந்த காரணமாக உயிரிழந்தனர்.

பயணிகள் – பல நாடுகளைச் சேர்ந்தவர்கள்
இந்தியர் – 169
பிரிட்டன் – 53
போர்த்துகீசி – 7
கனடியர் – 1

Air India பதில்:

“AI171 நிகழ்வால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் நாங்கள் நிற்கிறோம். இழப்பை எங்களால் நிறைவேற்ற முடியாது என்றாலும், அவர்களின் குடும்பங்களுக்கு எங்களால் இயன்ற அனைத்து ஆதரவும் வழங்க தயாராக இருக்கிறோம்,” என ஏர் இந்தியா தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தீவிர கவனக்குறைவா? அல்லது தொழில்நுட்ப சிக்கலா?
பைலட்களுக்குள் ஏற்பட்ட குழப்பமா? அல்லது மனித தவறா? என்பதற்கான முழுமையான பதில் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த இரு எரிபொருள் ஸ்விட்சுகளும் ஒரே நேரத்தில் தவறுதலாக மாற்றப்படுவது மிகவும் அபூர்வம் என விமானக் கள ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இது போன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் இருக்க, விமானப் பயணத்துறையின் கட்டுப்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியம்  வலியுறுத்தப்படுகிறது.

மூலம்:- CNN
தமிழாக்கம் :-தமிழ்த்தீ

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

போக்குவரத்து அமைச்சு புதிய ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணங்களை அறிவித்தது!

போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...

உலக அழகி போட்டி சர்ச்சையில் சிக்கியது: நடுவர்கள் இருவர் விலகல்

வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...

அரசு பொய்களை ஆயுதமாக்குகிறது; மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எங்கே? — நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...

ஓயிட்டா நகரில் பெரும் தீவிபத்து – ஒருவர் உயிரிழப்பு; 170 வீடுகள் சேதம்!

ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...