BBC-உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்யாவை ஒட்டியுள்ள சுமி நகரில் இடம்பெற்ற ரஷ்யாவின் கடும் தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுமியில் உள்ள ஒரு மருத்துவ நிலையத்தில் எதிரியின் டிரோன் (UAV) மூலம் நடத்தப்பட்ட தாக்குதலால் காயமடைந்தோர் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதாக பிராந்திய ஆளுநர் ஒலெக் கிரிகோரொவ் தனது சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று முன்பாக உக்ரைனின் தேசிய அவசர சேவைகள் திணைக்களத்தின்மீதான ரஷ்ய தாக்குதலினால் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், நால்வர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலுக்குப் பின் தீப்பிடித்த கட்டிடங்களை அணைக்கும் தீயணைப்பு வீரர்களின் புகைப்படங்களை அவசர சேவைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கருத்தை பதிவிட