முல்லைத்தீவு நகரில் நுழைவுப் பாதையாக செயல்பட்டு வந்த வட்டுவாகல் பாலம் இன்றைய தினம் (ஜூலை 15) மாலை உடைந்து சேதமடைந்ததால் அந்தப் பகுதியிலான போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
சேதமடைந்த பாலத்தின் திருத்தப்பணிகள் முடியும் வரை, அந்த வழியில் பயணிக்க விரும்புபவர்கள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மாற்றுப் பாதை:
புதுக்குடியிருப்பு – கேப்பாப்பிலவு வீதி வழியாக பயணிக்குமாறு பொதுமக்கள், வாகன ஓட்டிகள், அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
பாதுகாப்புக்காகவும், சீரான போக்குவரத்திற்காகவும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நேரத்தில் அரசாங்கம் மற்றும் பொது நிர்வாகம் வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்ந்து விரைவாக மீட்பு மற்றும் நிரந்தர தீர்வுகளை கொடுக்க வேண்டும்.
கருத்தை பதிவிட