சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத் தமிழர்களுக்கிடையில், கடந்த சில மாதங்களாக சீட்டுப்பிடித்தல் என்ற பெயரில் பாரிய நிதி மோசடிகள் நடைபெற்று வருவதாக வெளிப்படுகின்றது.
சீட்டுப்பிடித்தல் என்பது, நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு பணம் கட்டும் ஒரு முறையாகத் தோன்றினாலும், இது தற்போது பல தமிழர்கள் நிதி, நிம்மதி, உயிர் ஆகியவற்றையே இழக்கும் அளவிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
சுவிஸில் வசிக்கும் தமிழர் ஒருவரிடம், நூற்றுக்கணக்கான நபர்கள் சீட்டுப்பிடித்து, பல லட்சம் சுவிஸ் பிராங்குகளை இழந்துள்ளனர். இந்த நபர், ஆரம்பத்தில் நம்பிக்கையை ஏற்படுத்திய நிலையில், பெரும் தொகை கையில் சேர்ந்தவுடன் காணாமல் போனுள்ளார்.
ஏமாற்றப்பட்டவர்கள் இப்போது செய்வதறியாத நிலையில், மன உளைச்சலுடன் வாழ்ந்து வருகின்றனர்.
சீட்டுப்பிடித்தல் முறைகள் பல்வேறு வெளிநாடுகளில் சட்டரீதியாக செல்லுபடியாகாத வகையில் அமைந்திருப்பதால், இந்த மோசடியில் சிக்கியவர்கள், சட்டரீதியாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். சிலர், தனிப்பட்ட முறையில் மனவேதனை காரணமாக உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன என்பது துயரமான உண்மை.
மோசடி மட்டும் சுவிஸில் மட்டுமல்ல இந்த வகை மோசடிகள் தற்போது பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, யேர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என பல நாடுகளிலும் பரவலாக இடம்பெறுவதை உறுதிப்படுத்தியுள்ளன.சில இடங்களில், ஏமாற்றுபவர்களுக்கு எதிராக தாக்குதல் போன்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
மூன்று வருடமாவது நெருக்கமாக பழகிய ஒருவரே, “நம்பிக்கை” என்ற பெயரில் நம்மை இந்தச் சீட்டுக்குழிக்குள் இழுக்கின்றனர். முடிவில், கட்டி வைத்த பணம் முழுமையாகக் கையகப்படுத்திக்கொண்டு அந்த நபர் இடம் மாறிவிடுகிறார்.
இந்த வகைச் சீட்டுப் பண மோசடிகள் குறித்து தெளிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும். சட்டமுறை பாதுகாப்பின்றி, நம்பிக்கையைத் துனை வைத்து பணம் கொடுப்பது என்பது, ஒரு சமூக அழிவை உருவாக்கும் செயலாகவே திகழ்கிறது.
மூலம்: சுவிஸ்தமிழ்24
கருத்தை பதிவிட