பிரித்தானியாவில் 16 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் இராணுவத்தில் சேர அனுமதிக்கப்படுவதும், PAYE வரி கட்டுவதைத் தொடங்குவதும் சாதாரணமாக இருக்கையில், ஏன் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாதென்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான பதிலாகவே பிரித்தானிய அரசாங்கம் வாக்களிக்கும் வயதை 16 ஆகக் குறைக்கும் புதிய சட்ட முன்மொழிவை கொண்டு வருகின்றது.
“வாக்களிக்கும் உரிமை என்பது நூற்றாண்டுகளாகப் போராடி பெற்ற ஜனநாயக அடையாளமாகும். இதை நாம் மதிக்க வேண்டும்” என துணை பிரதமர் ஆன்ஜலா ரெய்னர் வலியுறுத்துகிறார்.
சார்டிஸ்டுகள், சஃப்ரஜெட்டுகள் போன்றவர்களின் போராட்டங்களால் பெறப்பட்ட ஜனநாயக உரிமைகள் இன்று இளைய தலைமுறைக்கும் விரிவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம்.
2023 ஆம் ஆண்டு திருமண வயதை 18 ஆக உயர்த்திய பிரிட்டன், இப்போது வாக்களிக்கும் வயதையும் சிறு வயதிலேயே வழங்கும் முடிவுக்கு வருவது, இளையரினத்தின் உரிமைகளுக்கு புதிய அங்கீகாரம் ஆக பார்க்கப்படுகிறது.
இலங்கையின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும்போது நாம் பிரித்தானிய ஜனநாயகத் தந்தையின் வாரிசுகளாக இருக்கிறோம். ஆனால் மக்கள் வாக்குரிமையைப் பாதுகாக்கும் கட்டுப்பாடுகள், கல்வி, சமூக விழிப்புணர்வுகள் இன்னும் பலமடைந்திருக்கவில்லை.
ஆகவே, இளைய தலைமுறையை வாக்காளர்களாக உருவாக்க முனைவது நன்று என்றாலும், அதற்கேற்ப அரசியல் கல்வியும், விமர்சன திறனும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த்தீயின் மைய கருத்தாகும்.
கருத்தை பதிவிட