சுழிபுரம் சத்தியக்காடு சந்தியில் இன்று மாலை மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று பதிவாகியுள்ளது.
சத்தியக்காடு வீதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளும், யாழ்ப்பாணம் காரைநகர் பிரதான வீதி வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இருவரும் கடுமையாக காயமடைந்துள்ளனர். விபத்தில் ஈடுபட்ட இரு வாகனங்களும் கடும் சேதமடைந்துள்ளன.
காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும், ஆம்புலன்ஸ் வருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, அவர்கள் முச்சக்கர வண்டிகளில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க, உப வீதிகளில் இருந்து பிரதான வீதிக்கு வரும் பயணிகள் அவசரத்தை தவிர்த்து, இருபுறத்தையும் நிதானமாக பார்த்து பின்னரே சாலை கடக்க வேண்டும்.
தற்போதைய வேகமான வாழ்க்கை முறையும், அவசர மனோபாவமும் இத்தகைய விபத்துகளுக்கு முக்கிய காரணமாக அமைகின்றன.
கருத்தை பதிவிட