யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் ஏற்பட்ட குழு மோதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
(ஜூலை 19) இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு, இன்று இரு பிரிவுகளாக சேர்ந்த குழுக்களுக்கிடையே வன்முறை வெடித்தது. மோதலின் போது ஒரு மோட்டார் சைக்கிள் தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டது. மேலும் மற்றொன்று கடுமையாக சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்து அதிதுரிதமாகச் சம்பவ இடத்திற்கு சென்ற வட்டுக்கோட்டை பொலிஸார் பதற்றத்தைக் கட்டுப்படுத்த முற்பட்டபோது, அவர்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொலிஸார் வானத்தை நோக்கி எச்சரிக்கைக்காக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் வட்டுக்கோட்டை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்தை பதிவிட