சுவிட்சர்லாந்தின் ஃப்ரைபர்க் மாகாணத்தில் “மாற்று மருத்துவம்” எனப்படும் மருத்துவம் செய்து வருவதாகக் கூறி பல பெண்களை துஷ்பிரயோக செய்த 58 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது வைத்தியசாலையில் சிகிச்சைபெற வந்த முதலாவது நபரை 2009-ஆம் ஆண்டு துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கியுள்ளார் என்றும் அதன் பின்னர் மொத்தமாக 12 பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நீதிமன்ற விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, குறித்த நபருக்கு 12 வருட கடுங்காவல் சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட ஐந்து பெண்களுக்கு மொத்தமாக 76,000.00 சுவிஸ் ஃப்ராங்குகள் இழப்பீட்டாக வழங்கும் கட்டளையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
மேலும், அவருக்கு மனநல சிகிச்சை கட்டாயமாக அளிக்கப்படும் என்றும், இனிமேல் மனநலத்தில் நுணுக்கமான நிலைமை கொண்ட நோயாளிகளுடன் பணியாற்றும் உரிமை வாழ்நாள்வரையிலும் மறுக்கப்படும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தண்டனை பெற்ற நபர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சம்பவம், மாற்று மருத்துவப் பரப்பல்களின் பின்னால் மறைந்திருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் மற்றும் பெண்களுக்கு நேரும் அபாயங்கள் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
கருத்தை பதிவிட