பொல்கஹவெல, ஜூலை 28, 2025 –
முன்னாள் இலங்கை கடற்படைத் தளபதி (ஓய்வு) அட்மிரல் நிஷாந்த உலுகெத்தென்னே, ஜூலை 30 வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுகஹெர பகுதியில் நிகழ்ந்ததாக கூறப்படும் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற விசாரணையின் பேரில், அவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) நேற்று கைது செய்தது.
இந்த சம்பவம், அவர் கடற்படை உளவுத்துறை இயக்குநராக பணியாற்றிய காலப்பகுதியில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
கருத்தை பதிவிட