காசா பகுதியில் உதவிப் பொருட்களை விமானம் மூலமாக வீசும் நடவடிக்கையை பிரான்ஸ் அடுத்த சில நாள்களில் தொடங்கும் என்று அந்த நாட்டு வெளிநாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
“மிகவும் அவசியமான மற்றும் அவசரமான தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் காசா மக்கள் எதிர்கொள்ளும் இதுவரை இல்லாத அளவான மனிதாபிமான நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் இந்த விமான வீச்சு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், “இக்களப்பணி நடைபெறும் போது காசா மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மிகுந்த முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றும் கூறியுள்ளது.
நிலவழியாகவும் உதவிகளை அனுப்பும் முயற்சியில் பிரான்ஸ் ஈடுபட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்தது. இருப்பினும் இது இஸ்ரேல் அதிகமான எல்லைநுழைவுப் பகுதியைத் திறக்கவேண்டும் என்பதைக் குறிக்கிறது. ஆனால் கடந்த காலங்களில் இஸ்ரேல் இதனை நிராகரித்துள்ளது.
“நிலமூலமாகவே உதவிகளை இலகுவாக, தடை இல்லாமல், அதிக அளவில் வழங்க முடியும்” என்றும் இது மக்களுக்கு மிகவும் தேவையான உதவிகளைச் சுமுகமாக அளிக்கும் மிகச் சிறந்த வழிமுறையாகும் என்றும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
“காசா எல்லைப்பகுதியில் உள்ள அனைத்து நுழைவுத் திடங்களையும் இஸ்ரேல் திறக்கவேண்டும். மேலும், நிலமூலமாக, உடனடியாக பாரிய அளவில், எந்தவித தடையும் இல்லாமல் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும்” என்றும் பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டிலும் பிரான்ஸ் மற்றும் ஜோர்டான் இணைந்து உணவுப்பொதிகள் மற்றும் சுகாதாரப் பெட்டிகளை காசா பகுதியில் விமானம் மூலமாக வீசியிருந்தன. அப்போது “காசா குடிமக்களுக்கு உதவ முனைந்துள்ள பிரான்ஸின் முழுமையான அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது” என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி நாடுகளும் நேற்று, ஜோர்டானின் உதவியுடன், காசா பகுதிக்குள் விமான வீச்சு மூலம் உதவிகளை அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளன.
Source:-CNN
கருத்தை பதிவிட