ஐ.நா. ஆதரவு பெற்ற உணவுப் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பின் எச்சரிக்கையின்படி, காசாவில் பஞ்சத்தின் “தீவிர சூழ்நிலை”உருவாகி வருகிறது. இது உணவுத்தட்டுப்பாடு என்னும் நிலையை மீறி, உயிர் பிரிகின்ற அளவிற்கு கடுமையாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவுடன் இணைந்து “மத்திய கிழக்கு பிரச்சனைகளை சீர்செய்ய” பணியாற்றுவதாக அறிவித்தார். மேலும் காசாவில் “உணவுப் பரிவர்த்தனை மையங்களை” அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். எனினும் இதுகுறித்த திட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை காசாவில் 60,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்திலேயே 113 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் முன்னணி இரண்டு மனித உரிமை அமைப்புகள் “காசா மக்கள் மீது இஸ்ரேல் இன அழிப்பு நடத்தியிருக்கிறது” எனக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. இதற்கு பதிலளித்த இஸ்ரேல் அரசு பேச்சாளர் ஒருவர், “எங்கள் நாட்டில் கருத்துச் சுதந்திரம் உள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம்” எனக் கூறினார்.
இஸ்ரேலின் நடவடிக்கைகள் மீது அவரது சொந்த மனித உரிமை அமைப்புகளே இன அழிப்பு என்று குற்றம் சாட்டும் அளவுக்கு போய் விட்டது. இது ஐ.நா. மற்றும் உலக நாடுகள் கண் மூடிக்கொள்ளக் கூடிய விஷயம் அல்ல.
Cource:-CNN
கருத்தை பதிவிட