குற்றவாளிக் குழுவைச் சேர்ந்த ஹிக்கடுவ லியனகே சஹான் அனைவராலும் “மிடிகம சஹன்” என அறியப்படும் சந்தேகநபர் நேற்று இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வருகைப் பகுதியில் குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான இவர் வேலிகம பகுதியைச் சேர்ந்தவர். இவர் மாத்தறை மற்றும் பாணந்துறை காவல் பிரிவுகளுக்குட்பட்ட பல கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர் என காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் தற்போது அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பாதாள உலக குழுத் தலைவரான ஹராக் கடா என அறியப்படும் “நதுன் சிந்தக விக்ரமரத்ன உடனும், மேலும் ஒரு பாதாளக்குழு உறுப்பினரான மிடிகம சுட்டி உடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் நேற்று மாலை 6.30 மணியளவில் இந்தியாவின் சென்னை நகரிலிருந்து புறப்பட்டு வந்த IndiGo விமானம் 6E-1173 மூலம் இலங்கையை வந்தடைந்தார். முன்னே வழங்கப்பட்ட உளவுத்தகவலின் அடிப்படையில் CID அதிகாரிகள் அவரை விமான நிலையத்திலேயே கைது செய்துள்ளனர்.
தற்போது சந்தேகநபர் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக களுத்துறை குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கருத்தை பதிவிட