2019ம் ஆண்டு முதல் எல் சல்வடார் நாட்டின் ஜனாதிபதியாக பணியாற்றி வரும் நயிப் புக்கேலே மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடலாம் என அந்நாட்டு பாராளுமன்றம் சட்டத் திருத்தம் மூலம் அனுமதி வழங்கியுள்ளது.
முந்தைய அரசியலமைப்பின் படி, ஓர் ஆளும் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னரும் உடனடியாக மீண்டும் போட்டியிட முடியாது எனக் கண்டறியப்பட்ட நிலையில், தற்போதைய திருத்தத்தின் மூலம் பதவிக்கால எல்லைகள் அகற்றப்பட்டுள்ளன.
அத்துடன், புதிய திருத்தத்தின் கீழ் ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளிலிருந்து 6 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டு, முன்பைப் போன்று இரண்டாம் சுற்று தேர்தல் (run-off vote) முறையும் முற்றாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே சுற்றில் வெற்றி பெற்ற வேட்பளர் தேர்தலில் வெற்றியாளராக அறிவிக்கப்படும்.
இந்த தீர்மானம் குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஜனநாயக ஆதரவு குழுக்கள் கடும் கண்டனத்தினை வெளியிட்டுள்ளன.
ARENA கட்சியின் முக்கிய உறுப்பினர் மார்செலா வில்லட்டோரோ, “இந்தத் திருத்தம் மூலம் எல்சல்வடாரில் ஜனநாயகம் மரணமடைந்துவிட்டது” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த மாற்றம் புக்கேலேவுக்கு அவரது அதிகாரத்தை காலமின்றி நீட்டிக்க வழிவகுக்கும் எனவும், இது வெனிசுவேலாவின் முன்னாள் தலைவர் ஹூகோ சாவேஸ் மாதிரி ஆட்சிக்குத் திரும்பும் அபாயம் ஏற்படுத்தும் என விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
நயிப் புக்கேலே 2019ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகிக்கிறார். 2021ல் அரசியல் அமைப்புச் சபையின் கட்டுப்பாடுகளை மாற்றி, நீதித்துறை நியமனங்கள் மற்றும் பராமரிப்புகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியமை சுட்டிக்காட்டிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள திருத்தம் அவரது ஆட்சி காலத்தை மேலும் நீட்டிக்க கூடிய வழியாகவே கருதப்படுகிறது.
கருத்தை பதிவிட