வவுனியா நகரில் உள்ள VSC தனியார் கல்வி நிலைய வளாகக் கிணற்றிலிருந்து, ஒரு உயர்தர வகுப்பு மாணவி இன்று (11) காலை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரணமடைந்தவர் வவுனியா கோமரசன்குளம் பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கல்வி பயின்று வந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான தகவலைப் பெற்ற வவுனியா காவல்துறையினர், சடலத்தை மீட்டு வவுனியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மரணத்திற்கான துல்லியமான காரணத்தை கண்டறிய, நீதிமருத்துவப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த துயரச் சம்பவம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கருத்தை பதிவிட