புகழ் பெற்ற பாதாள உலகத் தலைவரான நடுன் சிந்தக்க, எனப்படும் *‘கரக் கட்டா’*வை நீதிமன்றத்துக்குள் சுட்டுக் கொல்ல பத்திரிகையாளராக வேடமிட்டு திட்டமிட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேற்கு மாகாண வடக்கு பரப்புக் குற்றப்பிரிவு அதிகாரிகள் இன்று (02) மஹரகமையில் நடத்தி இருந்த விசேட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து ஒரு ரீவால்வர் துப்பாக்கி, பல குண்டுகள் மற்றும் பகுதியளவு எரிக்கப்பட்ட காணொளி கேமரா என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இந்தக் கொலை முயற்சியை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவரான மனுதினு பத்மசிறி பெரேரா எனப்படும் ‘கெஹெல்பத்தர பட்மே’ என்பவரே உத்தரவிட்டதாகவும், அந்த உத்தரவின்படி குறித்த நபர் செயல்படத் திட்டமிட்டிருந்ததாகவும் சந்தேகம் நிலவுகிறது.
கருத்தை பதிவிட