விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவரான முன்னாள் உறுப்பினர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
55 வயதுடைய இராமபிள்ளை கமலராசா, விடுதலைப் புலிகளினால் “மகேந்தி” என்று அழைக்கப்பட்ட இவர், தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இச்சம்பவம் உள்ளூர் மக்களுக்கும் சக முன்னாள் போராளிகளுக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்தை பதிவிட