முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலை அருகில் இன்று (04) பரபரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மல்லாவியிலிருந்து முல்லைத்தீவு நீதிமன்றம் நோக்கி, ஒரு கைதிக்கு பிணை எடுக்கச் சென்ற குழுவினர் பயணித்த கார் மீது, மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் திடீரென இடைமறித்து கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். தாக்குதலை நடத்திய பின்னர் அவர்கள் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் கார் சாரதியுடன் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாட்டினால் நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கூறினாலும், பிணை எடுப்பதைத் தடுக்கவோ அல்லது வேறு நோக்கத்திற்காகவோ தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என அருகில் இருந்தவர்கள் சந்தேகித்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்துக்குள் முல்லைத்தீவு போலீசார் அங்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.
கருத்தை பதிவிட