முகப்பு இலங்கை பாரிய பேருந்து விபத்து. மாநகர சபை செயலாளர், உத்தியோகத்தர்கள் உட்பட 15 பேர் பலி!
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

பாரிய பேருந்து விபத்து. மாநகர சபை செயலாளர், உத்தியோகத்தர்கள் உட்பட 15 பேர் பலி!

பகிரவும்
பகிரவும்

பதுளை, செப்டம்பர் 05:

இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் சாலை விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படும் சோகமான விபத்து, நேற்று (04) இரவு 9.00 மணியளவில் எல்ல – வெல்லவாயச் சாலையில் இடம்பெற்றது.

மகாவாங்குவா மவுண்ட் ஹேவன் மண்டபம் அருகே இடம்பெற்ற இவ்விபத்தில் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் தங்காலை மாநகர சபையின் செயலாளர், அலுவலக உத்தியோகஸ்தர்கள் 12 மற்றும் அவர்களது குழந்தைகள் இருவர் அடங்குவர்.

இந்தச் சம்பவத்தில் பெண்கள், ஆண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என முழு குடும்பங்களே அழிந்துவிட்டது. பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் தியத்தலாவ, பண்டாரவளை மற்றும் பதுளை மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், பலர் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு நடவடிக்கைகளில் காவல்துறை, ராணுவம், சிறப்பு அதிரடிப்படை மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து செயல்பட்டுள்ளனர்.

இந்த துயரச் சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

பாதாள உலகத் தலைவனின் மனைவி செப்டம்பர் 18 வரை சிறையில்!

கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் அசங்க எஸ். போதரகம, நேற்று (04) மிடெணியையைச் சேர்ந்த, பிரபல பாதாள...

தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட முன்னாள் விடுதலை புலி முக்கியஸ்தர்!

விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவரான முன்னாள் உறுப்பினர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த...

செயல்பாடின்றி உள்ள 33 அரச நிறுவனங்களை மூட அமைச்சரவை ஒப்புதல்!

கொழும்பு, செப்டம்பர் 4 – நிதி, பொருளாதார நிலைத் திடத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக...

முல்லைத்தீவில் பிணை எடுக்கச் சென்ற குழுவினர் மீது தாக்குதல்!

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலை அருகில் இன்று (04) பரபரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மல்லாவியிலிருந்து முல்லைத்தீவு...