எருசலேமில் பரபரப்பான பேருந்து நிறுத்தம் ஒன்றில் திங்கட்கிழமை (08) காலை இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது கடந்த இரண்டு ஆண்டுகளில் நகரில் இடம்பெற்ற மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுகிறது.
ஆயுதங்கள், தோட்டாக்கள் மற்றும் கத்தி ஏந்திய வாகனத்தில் தாக்குதலாளர்கள் வந்து, பேருந்துகளுக்காக காத்திருந்த டஜன் கணக்கான மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேரில் கண்ட சாட்சியாளர் எலசார் டொலிடானோ ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது,
“மக்கள் கீழே விழுவதையும் தப்பிக்க முயன்றபோது காயமடைவதையும் பார்த்தேன். துப்பாக்கிச் சூடு ஒலித்தபின், சில விநாடிகள் யாரும் புரிந்துகொள்ளவில்லை. பின்னர் ஒருவர் ‘தீவிரவாதத் தாக்குதல்!’ எனக் கத்தியதும் மக்கள் ஓடத் தொடங்கினர்” என்றார்.
சம்பவ இடத்திலேயே, தாக்குதலாளர்கள் இஸ்ரேல் போர்சிப்பாய் ஒருவராலும் பொதுமகன் ஒருவராலும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, நாட்டில் மேலும் பொதுமக்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டும் என வலதுசாரி அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்ததாவது, தாக்குதலாளர்கள் எருசலேமை அண்டிய மேற்கு கரை கிராமங்களைச் சேர்ந்த 20 வயதான முஸ்தன்னா ஓமர் மற்றும் 21 வயதான முகமது தாஹா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த ஆறு பேரில் ஒருவர் ஸ்பெயின் நாட்டு பிரஜை என்றும், 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கருத்தை பதிவிட