முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட அரச அனுகூலங்கள் புதிய சட்டத்தின் கீழ் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்காக கொழும்பில் புதிய குடியிருப்பை உறுதிப்படுத்த ஆதரவாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்த வட்டாரத் தகவலின்படி, தமது அரசியல் மற்றும் பொதுக்கூட்டச் செயல்பாடுகளை முன்னெடுக்க போதுமான இடவசதி கொண்ட வீடு ஒன்றைத் தேடும் முயற்சியில் ராஜபக்ச ஈடுபட்டு வருகிறார். இதற்கான விவாதங்கள் சில வீட்டு உரிமையாளர்களுடன் நடைபெற்று வந்தாலும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசு வழங்கி வந்த குடியிருப்பு, வாகனம், பாதுகாப்பு உள்ளிட்ட சலுகைகளை புதிய சட்டத்தின் மூலம் நீக்கியதால், ராஜபக்ச தனது குடியிருப்பு மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
கருத்தை பதிவிட