கொழும்பு – 33 ஆண்டுகளுக்கு முன் வாசுதேவ நானாயக்கார உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து தொடங்கிய பாதயாத்திரை, இலங்கை ஜனநாயக அரசியலின் ஒரு முக்கிய அடையாளமாகவும், மக்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பான போராட்டமாகவும் இருந்தது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான வாசுதேவ நானாயக்கார அவர்களைச் சந்தித்து உடல் நலம் விசாரித்ததையடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டதாவது:
*“பழைய போராட்டத் தோழரான வாசுதேவ நானாயக்கார அவர்களைச் சந்தித்து உடல் நலம் விசாரிக்கச் சென்றேன். நாங்கள் இருவரும் 1970 ஆம் ஆண்டில் அரசியலுக்குள் நுழைந்தோம். எங்கள் நட்பு மிகப் பழமையானதோடு சிக்கலானதும்கூட. வாசு ஒரு தனித்துவமான போராளி, உணர்ச்சி வசப்பட்ட குணம் கொண்டவர், நல்ல நண்பர்.
கடந்த காலத்தில் கொழும்பிலிருந்து கதிர்காமம் வரை நடைபெற்ற பாதயாத்திரை இன்று பலரின் நினைவில் இருந்து மங்கியிருக்கலாம். காணாமல் போனோருக்காக குரல் கொடுத்ததும், வட–கிழக்கு போருக்குத் தீர்வு தேவை என்பதை வலியுறுத்தியதும், அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதை எதிர்த்ததும் போன்ற ஜனநாயக நோக்கங்களுடன் அந்தப் பாதயாத்திரை 1992 மார்ச் 16 அன்று விஹாரமகாதேவி பூங்கா முன்பாக தொடங்கியது.
நாடு முழுவதும் ஒலித்த ‘ஜானஜோஷா’ 1992 ஜூலை 1 ஆம் தேதி நண்பகல் 12.35 மணிக்கு நடந்தது வாசுவுக்கு ஒருபோதும் மறக்க முடியாத ஒன்றாகும்.
பீதி நிலவிய காலத்தில் இளைஞர்களின் காணாமல் போவதற்கு எதிராகவும் அவர்களின் மனித உரிமைக்காக குரல் கொடுத்தபோதும் வாசு எனக்குப் பக்கபலமாக இருந்தார். அவை அனைத்தும் வரலாற்றுச் சுவைமிகு நிகழ்வுகள் மட்டுமல்ல, இலங்கை ஜனநாயக அரசியலின் அடையாளங்களாகும்.
கருத்தை பதிவிட