இலங்கை போலீசின் மா அதிபரின் உத்தரவின் கீழ் நாடளாவிய அளவில் முன்னெடுக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கை நேற்று (12) தினம் முழுவதும் இடம்பெற்றது.
போலீஸ் ஊடகப் பிரிவின் தகவலின்படி, இந்நடவடிக்கையில் மொத்தம் 3,709 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியமைக்காக 33 பேர், நாடளாவிய குற்றச்செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 17 பேர், மேலும் வெளியிடப்பட்ட திறந்த பிடியாணைகளின் பேரில் 154 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள அனைத்து பிராந்திய போலீஸ் நிலையங்களின் பொறுப்பில் முன்னெடுக்கப்பட்டதாகவும், ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதாகவும் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், ஒரே நாளில் 26,985 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
கருத்தை பதிவிட