திருகோணமலையின் வடகிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் கடற்கரைப் பகுதியில் இன்று (18) பிற்பகல் 4.06 மணியளவில் 3.9 ரிக்டர் அளவிலான சிறிய நிலநடுக்க அதிர்வு பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) அறிவித்துள்ளது.
எனினும், இந்த அதிர்வினால் இலங்கைத் தீவுக்கு எந்தவித சுனாமி அபாயமும் இல்லை என்று அனர்த்த முகாமைத்துவ மையம் (DMC) உறுதியளித்துள்ளது.
பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய சிறிய நிலநடுக்க அதிர்வுகள் அவ்வப்போது பதிவாகினும், அவை பெரும்பாலும் கடற்கரைக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
கருத்தை பதிவிட