தெனியாய பிரதேசத்திலிருந்து மாத்தறை நோக்கி இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்றிருந்த ஆம்புலன்ஸ், மொரவக்க அத்துஎலப் பகுதியில் வீதியை விட்டு விலகி, ஒரு வீட்டின் நுழைவாயிலில் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸின் உள்ளே இரண்டு பியர் கேன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
விபத்து நிகழ்ந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், பின்னர் அவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
ஓட்டுநர் விபத்தின் போது குடிபோதையில் இருந்தாரா என்பது தொடர்பான விசாரணைக்காக அவர் மாத்தறை பொது வைத்தியசாலையின் தடயவியல் வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன
கருத்தை பதிவிட