“ஜே.வி.பியினர் 1988–1989ஆம் ஆண்டுகளில் செய்த சண்டித்தனங்களை இப்போது மீண்டும் காட்ட முயல வேண்டாம். நாம் 2025 உலகில் வாழ்கிறோம்” என்று மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் நிறைவு பெற்றதையொட்டி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்யும் போதே மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
“கடந்த கால வன்முறைகளை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிப்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு பாதகமாகும். இன்றைய உலகச் சூழல் முற்றிலும் மாறியுள்ளது. மக்களின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் மாறியுள்ளன. அதற்கு ஏற்ப அரசியல் செயல்பாடுகள் இருக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
கருத்தை பதிவிட